Popular Post

ஹதீஸ் நூற்கள் ஓர் அறிமுகம்.

By : Unknown



ஹதீஸ் நூற்கள் பல வகைகளாக திரட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு வகைளான தொகுப்புகளுக்கும் தனித்தனியான பெயர்கள் உள்ளன. 

ஸுனன் 
தொழுகை, நோன்பு போன்ற பாடத் தலைப்புகளின் கீழ் பலரும் அறிவிக்கும் ஹதீஸ்களை சில நல்லறிஞர்கள் திரட்டியுள்ளனர். இவ்வாறு அமைந்த நூற்கள் ஸுனன் எனப்படும். 

புகாரி, முஸ்லிம், அபூதாவூத். திர்மிதீ, நஸயீ, இப்னு மாஜா, தாரமீ, அல்முன்தகா, இப்னு குஸைமா, இப்னுஹிப்பான், ஸுனன் ஸயீத் பின் மன்சூர், பைஹகீ போன்ற தொகுப்புகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

ஸஹிஹ் 
புகாரி, முஸ்லிம் ஆகிய நூற்களில் ஆதாரப்பூர்வமானவை மட்டுமே தொகுக்கப்படுவதை தொகுத்தவர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால் அதை ஸுனன் என்று குறிப்பிடும் வழக்கம் இல்லை. ஸஹீஹ் என்றே குறிப்பிடுகின்றனர். இது போல் இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களும் இவ்வாறே ஸஹீஹ் என்று குறிப்பிடப்படுகின்றன. 

முஸ்னத் 
அபூபக்ர் அறிவித்த ஹதீஸ்கள், உமர் அறிவித்த ஹதீஸ்கள் என்று ஒவ்வொரு நபித்தோழரும் அறிவித்த ஹதீஸ்களை ஒரு இடத்தில் திரட்டி ஹதீஸ்களைத் தொகுத்தவர்களும் இருந்தனர். இவ்வாறு தொகுக்கப்பட்ட நூற்கள் முஸ்னத் எனப்படும்.

முஸ்னத் எனப்படும் நூலில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உள்ள ஹதீஸைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாது. முஸ்னத் அஹ்மத், முஸ்னத் அபீ அவானா, முஸ்னத் தயாலிஸீ, முஸ்னத் ஷாஃபீ, முஸ்னத் அபீஹனீபா, முஸ்னத் ரபீவு, முஸ்னத் இஸ்ஹாக், முஸ்னத் பஸ்ஸார், முஸ்னத் ஹுமைதி, முஸ்னத் ஷிஹாப், முஸ்னத் அப்து பின், முஸ்னத்இப்னுல் ஜஃது, முஸ்னத் ஹாரிஸ் போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

முஃஜம் 
ஒருவர் பத்து ஆசிரியர்களிடம் ஹதிஸ்களைக் கேட்டிருப்பார். எந்தெந்த ஆசிரியர்களிடம் கேட்டாரோ அதையே தலைப்பாக்கியும் நூற்கள் தொகுக்கப்பட்டன. அவை முஃஜம் எனப்படும். இப்ராஹீம் என்ற ஆசிரியர் எனக்கு அறிவித்தவை - 

உஸ்மான் என்ற ஆசிரியர் அறிவித்தவை என்பது போல இது வகைப்படுத்தப்பட்டிருக்கும். இத்தகைய நூற்களில் ஒரு ஹதீஸைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். 
தப்ரானியின் சகீர், தப்ரானியின் அவ்ஸத், தப்ரானியின் கபீர் ஆகிய நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

ஜாமிவு 
மார்க்கச் சட்டதிட்டம், கொள்ளை விளக்கம், வரலாறு போன்ற திருக்குர்ஆன் விளக்கவுரை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் கொண்டதாக தொகுக்கப்பட்டு பாடத்தலைப்புகளில் அமைக்கப்பட்டவை ஜாமிவு எனப்படும். ஸுனன் என்ற வகையிலான நூற்களில் தொழுகை, நோன்பு போன்ற சட்டதிட்டங்கள் மட்டும் இடம் பெற்றிருக்கும். ஜாமிவு என்ற வகையில் அதைவிட கூடுதலான பல விபரங்கள் இடம் பெற்றிருக்கும். 

முஸன்னப் 
நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களுடன் நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்கள் ஆகியோரின் சொல், செயல்களையும் சேர்த்து தொகுக்கப்பட்டவை முஸன்னப் எனக் கூறப்படுகிறது. 
முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக், முஸன்னப் இப்னு அபீஷைபா போன்ற நூற்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். 

முஸ்தத்ரக் 
குறிப்பிட்ட விதிகளின் அடிப்படையில் ஒருவர் தொகுத்த நூலில் எல்லா ஹதீஸ்களும் இடம் பெற்றிருக்க முடியாது. அந்த விதிகளின் கீழ் அமைந்த எத்தனையோ ஹதீஸ்கள் விடப்பட்டும் போய்விடும். இவற்றை இன்னொருவர் தொகுத்தால் அது முஸ்தத்ரக் எனப்படும். 

உதாரணமாக புகாரியும் முஸ்லிமும் சரியான ஹதீஸ்கள் எவை என்பதற்கு சில நிபந்தனைகள் வகுத்துள்ளனர். அந்த நிபந்தனைகளின் படி அமைந்த பல ஹதீஸ்களை அவர்கள் விட்டுள்ளதால் அவற்றை ஹாகிம் தொகுத்தார். புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைப்படி சரியான ஹதீஸ்களாக இருக்கத் தகுதியானவை என்று பல ஹதீஸ்களைத் தொகுத்துள்ளார். இப்படி தொகுக்கப்பட்டவை முஸ்தத்ரக் எனப்படும்.

(ஆனால் ஹாகிம் இந்தப் பணியை நிறைவாகச் செய்யவில்லை பலவீனமான பல ஹதீஸ்களைப் பதிவு செய்துவிட்டு இது புகாரி, முஸ்லிம் ஆகியோரின் நிபந்தனைகளின் படி ஸஹீஹ் எனும் தரத்திலமைந்துள்ளது எனக் கூறுவார். ஆனால் உண்மையில் இது இட்டுக்கட்டப்பட்டதாக இருக்கும் என்பது தனி விஷயம்). 

மவ்ளூஆத் 
நல்லறிஞர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையெல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் தனி நூற்களையே எழுதியுள்ளனர். அவை மவ்ளூஆத் எனப்படும். 
இப்னுல் ஜவ்ஸீ, முல்லா அலி காரி, சுயுத்தி போன்ற அறிஞர்களின் நூற்கள் மிகவும் பிரசித்தி பெற்றவைகளாகும். 

தங்களின் முழு வாழ்நாளையும் இந்த ஆய்வுக்காக அர்ப்பணித்து இட்டுக்கட்டப்பட்டவைகளை இந்த நல்லறிஞர்கள் இனம் காட்டிச் சென்றார்கள். பொய்களை களையெடுக்கும் முயற்சியில் இவர்கள் இறங்கியிருக்காவிட்டால் இஸ்லாத்துக்கும் ஏனைய மார்க்கங்களுக்கும் வித்தியாசம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும். 

ஹதீஸ் நூற்கள் தொகுக்கப்படும் முறையை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன.
Tag : ,

விண்வெளிப் பயணம் ஒரு முன்னறிவிப்பு..!

By : Unknown


விண்வெளிப் பயணம்
ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.” அல்குர்ஆன் 55:32-33 இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. 
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது. 

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பணை செய்து கூட பார்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்வதாகும்.[1] பௌதீக இயக்க ரீதியிலான விண்வெளி ஆய்வு மனித விண்வெளிக்கலங்கள் மற்றும் இயந்திர விண்வெளிக்கலம் ஆகிய இரண்டினாலும் நடத்தப்படுகிறது. விண்வெளியிலுள்ள பொருட்களை நோக்குதல், விண்வெளியியல் என்று அறியப்பட்டு நம்பக்கூடிய பதிவு செய்யப்பட்ட வரலாற்றையும் முன் கடந்தது இருக்கையில், 20 ஆம் நூற்றாண்டின் வளர்ச்சியான திரவ-எரிவாயு விண்வெளி வாகன இயந்திரப் பொறிகளே பௌதீக விண்வெளி ஆய்வினை நடைமுறையில் உண்மையாக்க அனுமதித்தன. விண்வெளி ஆய்விற்கான பொதுவான தர்க்கங்களில் உள்ளிட்டவை முன்னேறிவரும் அறிவியல் ஆராய்ச்சி, இணையும் பல்வேறு நாடுகள், மனித இனத்தின் எதிர்கால இருப்பை உறுதிசெய்வது மற்றும் இராணுவ, தந்திரோபாய சாதகங்களை இதர நாடுகளுக்கு எதிராகப் உறுதிசெய்வது ஆகியவையாகும். விண்வெளி ஆய்வின் மீது பல்வேறு விமர்சனங்கள் சில நேரங்களில் செய்யப்படுகிறது
Tag : ,

லூத் (அலை) அவர்களின் சமுதாயம் ஒரு முன்னெச்சரிக்கை...!

By : Unknown


இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். அதில் சதோம் என்பது முக்கியமான நகரமாகும். ஓரின புனர்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக்கேடான செயலை விட்டுவிடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அச்சமுகத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங்கமாக செய்து வந்தனர். இதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.

அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள்
இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.

“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.

இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.

நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கோண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.

(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். அல்குர்ஆன் 29:30-35


அதனால் உருவாகியதுதான் இந்த சாவுக்கடல் அல்லது லூத்தின் கடல். ஜோர்டான் நாட்டுத் தலைநகரம் அம்மானிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தான் சாவுக்கடல் உள்ளது.


இக்கடலில் உள்ள உப்பின் அளவு சாதரணமாக உள்ள கடலின் உப்பின் அளவைவிட 8 மடங்கு அதிகமாகும். ஆகையால் இந்நீரில் விழும் எல்லாப் பொருள்களும் மிதப்பதை காணலாம். உயிரினம் உயிர்வாழமுடியாத காரணத்தினால் இக்கடல் சாக்கடல் என்றழைக்கப்படுகிறது. இவ்வுலகில் ஓரின புணர்ச்சியில் ஈடுபடக்கூடிய எல்லா காலங்களிலும் உள்ள எல்லோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இக்கடலை அல்லாஹ் ஏற்ப்படுத்தியுள்ளான்.
Tag : ,

The Big Bang theory - பெரு வெடிப்புக் கொள்கை

By : Unknown


நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்ட வெளியில் உள்ள பொருட்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான தீப்பிழம்பாக இருந்திருக்கிறது. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருட்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர்கள் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வாயுக்கள் ஆங்காங்கே நட்சத்திரக் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இன்றும் அண்டவெளி முழுதும் ஒரே சீராகப் பரவிக் காணப்படும் நுண்ணலைக் கதிர் வீச்சானது மேற்குறிப்பிட்ட பெரு வெடிப்பின்போது வெளியான கதிர் வீச்சின் எச்சங்களே என்று கருதப் படுகின்றது. 
பின் வரும் வரிசை பெருவெடிப்பு ஆரம்பமானதில் இருந்து அணுக்களும் மற்ற அண்டப் பொருட்களும் எக்காலத்தில் தோற்றம் பெற்றது என்பதை குறிப்பதாகும்.
  1. வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது.
  2. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது.
  3. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின.
  4. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின.
  5. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தன்னுடைய வெப்பத்தை தணித்ததினால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும் உருவாகின.
  6. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன்,ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின.
  7. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின.
  8. இந்நிகழ்வுகளுக்கு எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோற்றம் பெற்றன. தற்காலத்தில் இருந்து இவை தோற்றம் பெற்று ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன. 

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். 

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும். 

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது. 
Tag : ,

நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள்.

By : Unknown


நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  

ஸஹீஹுல் புகாரி 39
Tag : ,

இஸ்லாத்தில் இசையும் பாடலும் [- mujahidsrilanki.com]

By : Unknown

இசை, பாடல் இரண்டும் இரண்டறக் கலந்த அம்சமாகும். சிற்சில இடங்களிலேயே அவைகள் தனித்து நிற்கின்றன. பாடல் இசையின்றிப் பாடப்படுகின்ற பொழுது அனுமதிக்கின்ற இஸ்லாம் அவை இணைகின்றபோது இரண்டையும் வன்மையாகத் தடைசெய்வதை அல்குர்ஆன், அஸ்ஸ{ன்னா வைக்கொண்டு தெளிவுபடுத்துவது இந்தக் கட்டுரையின் நோக்கம்.
01. وَمِنَ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِينٌ (6) لقمان : 6
“மனிதரில் அறிவின்றி அல்லாஹ்வின் வழியிலிருந்து வழிகெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குகின்றவர்களும் இருக்கின்றனர். அதனைப் பரிகாசமாகவும் எடுக்கின்றனர். இத்தகையோருக்கு இழிவு தரும் வேதனையுண்டு.” (லுக்மான்:06)
வீணான செய்திகள் ஏராளமாக இருந்தாலும் விலைக்கு வாங்கல் என்ற வர்ணிப்பிற்கொத்த அம்சம் என்ன என்பதை பின்வருகின்ற, சட்ட ரீதியாக ஹதீஸின் தரத்தில் அமைந்த இரண்டு அதர்களும் தெளிவுபடுத்துகின்றன.
2:
مصنف ابن أبي شيبة -  21130 – حدثنا أبو بكر قال حدثنا حاتم بن إسماعيل عن حميد بن صخر عن عمار الدهني عن سعيد بن جبير عن أبي الصهباء عن عبد الله بن مسعود أنه سئل عنها فقال الغناء والذي لا إله الا هو
“எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக வீணான செய்திகள் என்பது (இசை கலந்த) பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)

03. الأدب المفرد – 1265 – حدثنا حفص بن عمر قال حدثنا خالد بن عبد الله قال أخبرنا عطاء بن السائب عن سعيد بن جبير عن بن عباس : في قوله عز و جل ومن الناس من يشتري لهو الحديث قال الغناء وأشباهه
பாடல் அது போன்றவைகளைப் பற்றியே இவ்வசனம் இறங்கியது.” என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{ கூறுகிறார். (அதபுல் முப்ரத்-1265, பைஹகீ-10-221-223)
இசை மூலம் ஷைத்தான் ஒருவனது ஆன்மீகத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறான் என்பதையும் வழிகேட்டின்பால் இட்டுச் செல்கிறான் என்பதையும் இவ்வசனம் தெளிவாக விளங்கப்படுத்துகிறது. இந்த ஒரு வசனமே இசை ஹராம் என்பதற்கு போதுமானதெனினும் நபியவர்கள் தன் கூற்றுக்கள் மூலமும் இதனை வன்மையான வார்த்தைகளால் தடை செய்திருக்கிறார்கள்.அவற்றில் சிலதை கீழே தருகிறோம்.

04. صحيح البخاري-5590- وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الْكِلَابِيُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الْأَشْعَرِيُّ قَالَ حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ وَاللَّهِ مَا كَذَبَنِي سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الْحِرَ وَالْحَرِيرَ وَالْخَمْرَ وَالْمَعَازِفَ وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ يَأْتِيهِمْ يَعْنِي الْفَقِيرَ لِحَاجَةٍ فَيَقُولُونَ ارْجِعْ إِلَيْنَا غَدًا فَيُبَيِّتُهُمْ اللَّهُ وَيَضَعُ الْعَلَمَ وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
“விபச்சாரம், பட்டாடை, மது, இசைக் கருவிகளை ஹலாலாகக் கருதக்கூடிய சில கூட்டத்தினர் எனது சமுதாயத்திலே தோன்றுவார்கள்…” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ மாலிக், ஆதாரம்: புகாரி – 5590)
விபச்சாரம், மது போன்றவைகளை ஹலாலாகக் கருதுவோர்களுடன் இசையைக் ஹலாலாகக் கருதுபவர்களையும் நபியவர்கள் இணைத்துக் கூறுவதிலிருந்து இசையை நபியவர்கள் எவ்வளவு மோசமான ஒன்றாகக் கருதியுள்ளார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது
. البزار في ” مسنده ” ( 1  377 795 – كشف الأستار ) 05
عن أنس بن مالك رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : صوتان ملعونان في الدنيا والآخرة : مزمار عند نعمة ورنة عند مصيبة
“இரண்டு ஓசைகள் சபிக்கப்பட்டவையாகும். சந்தோசத்தின் போது கேட்கும் குழல் ஓசை, சோதனையின் போது கேட்கும் ஓலம்.” என்று நபியவர்கள் கூறினார்கள். {அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹ{ அன்ஹ{, ஆதாரம்: பஸ்ஸார் – 1:377-795 (பார்க்க: தஹ்ரீமு ஆலாதீத் தர்ப் – 52)}
சந்தோசத்தின் போது கூட நபியவர்கள் குழல்கள் மூலம் எழுப்பப்படும் ஓசையை தடைசெய்தது மட்டுமல்லாமல் சபிப்பதன் மூலம் Wind Instrumentஎன்றழைக்கப்படும் வகை சார்ந்த அனைத்து இசைக் கருவிகளையும் தடை செய்கிறார்கள். பொதுவாக இசைக் கருவிகளை தடை செய்தது மாத்திரமின்றி குறிப்பிட்டும் தடைசெய்வது நபியவர்கள் இசையை எவ்வளவு அஞ்சுகிறார்கள் என்பதை எமக்குத் தெளிவாக்கிறது.
06. سنن البيهقي الكبرى – (10  221) 20779 – أخبرنا أبو الحسين بن بشران أنبأ الحسين بن صفوان ثنا عبد الله بن محمد بن أبي الدنيا ثنا يحيى بن يوسف الزمي ثنا عبيد الله بن عمرو عن عبد الكريم هو الجزري عن قيس بن حبتر عن بن عباس عن النبي صلى الله عليه و سلم قال : إن الله تبارك وتعالى حرم عليكم الخمر والميسر والكوبة وهو الطبل وقال كل مسكر حرام
“மது, சூதாட்டம், மேளக் கருவிகளை அல்லாஹ் என்மீது தடைசெய்துவிட்டான். போதை ஏற்படுத்தும் அனைத்தும் ஹராமாகும்.” என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹ{ அன்ஹ{, ஆதாரம்: அபூதாவூத்-3696, பைஹகீ-10-221)
பொதுவாக இசைக் கருவிகளை தடைசெய்தது போன்று இன்று Drum வகை போன்ற அனைத்துக் கருவிகளையும் அல்லாஹ் தன்மீது ஹராமாக்கியதாகக் கூறுகிறார்கள். மேற்கூறப்பட்ட அனைத்து ஆதாரங்களும் இசைக் கருவிகளை முழுமையான வடிவிலே தடைசெய்வதை அறிவுள்ளவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.
சொல் விளக்கம்:- நபிகளாருடைய காலத்தில் காணப்பட்ட எத்தனையோ கருவிகள் இன்று பல் வடிவம் பெற்று வளர்ச்சி அடைந்து ஒரு கலையம்சமாக மாறிவிட்டன. ஹதீஸ்களிலே இடம்பெறும் வார்த்தைகள் சில நபிகளாருடைய காலத்திலே காணப்பட்ட கருவிகளை குறித்துப் பேசினாலும் அதே இசையை ஏற்படுத்தக் கூடிய ஏராளமான கருவிகள் இன்று உபயோகத்தில் உள்ளன. அதே நேரம் இசைக் கருவிகள் என்றுள்ள எல்லாமே அடங்கும் வன்னம் இடம்பெற்றுள்ள வார்த்தை இவையனைத்தையும் முழுமையாகத் தடைசெய்கின்றது. பின்வருவனவைகளே அவ்வார்த்தைகள்:
01- معازف அனைத்து இசைக் கருவிகளையும் இது குறிக்கும்.
02- الكوبة-الطبل பறை, பேரிகை, மத்தளம், தவுல், தப்பட்டை போன்ற Drum வகைகளை இது குறிக்கும்.
03- مزمار புல்லாங்குழல் போன்ற காற்று வாத்தியங்கள் (Wind Instrument) வகை சார்ந்த அனைத்தையும் இது குறிக்கும்.
04- القنين வீணை போன்ற நரம்பு வாத்தியங்கள்(Daff) அனைத்தையும் இது குறிக்கிறது.
அத்துப் (الدف) என அழைக்கப்படும் ஒரு பக்கம் தோலால் மூடப்பட்ட கருவியை பெருநாட்களிலும் திருமண நேரங்களிலும் மாத்திரம் நபியவர்கள் அனுமதித்ததாக புகாரி-906,909,2750,3716 என்ற இலக்கங்களில் ஆயிஷா ரழியல்லாஹ{ அன்ஹா வழியாக இடம்பெறும் ஹதீஸ{ம் புகாரி-3779,4852 என்ற இலக்கங்களில் ருபைஃ பின்த் முஅவ்வித் ரழியல்லாஹ{ அன்ஹா வழியாக இடம்nறும் ஹதீஸ{ம் வந்துள்ளமையால் அந்நேரங்களில் மாத்திரம் இது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ள வேண்டும்.
எனவே அல்லாஹ்வுடைய அவனது தூதருடைய எச்சரிக்கையை தெளிவாக அறிந்த பின் இஸ்லாத்தை அதன் தூய்மையான வடிவில் அறிந்து பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவரும் இசை கலந்த அனைத்து அம்சங்களையும் தவிர்த்து அல்லாஹ்விடத்திலே கூலியைப் பெற்றவர்களாக மாறுவோமாக.

Tag : ,

பாலஸ்தீன சிறுவர்களின் நிலை…[referred from mujahidsrilanki.com]

By : Unknown


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
தங்கள் மீதும் தங்களின் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.
சர்வதேச சிறுவர்கள் பாதுகாப்பு அமைப்பு (Defense for Children International – Palestine Section) – பாலஸ்தீன கிளை, ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்டோரின் உரிமைகளை பாதுகாப்பதை தன் குறிக்கோளாக கொண்ட அமைப்பு.
ரிபத் கஸ்சிஸ் (Rifat Kassis) இதனுடைய தலைவராக 2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  தற்போது இரண்டாவது முறையாக பதவியில் உள்ளார். சமீபத்தில் “The Electronic Intifada” என்னும் இணையப்பத்திரிக்கையை சேர்ந்த அட்ரி நிவ்ஹோப் (Adri nieuwhof) இவரிடம் நேர்க்காணல் நடத்தினார். அப்போது ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் உள்ள சிறுவர்களின் நிலை குறித்து ரிபத் கஸ்சிஸ் விளக்கினார்.
அட்ரி நிவ்ஹோப்: உங்கள் அமைப்பை பற்றியும், நீங்கள் இங்கு செய்யக் கூடிய பணி பற்றியும் விளக்கவும்.
ரிபத் கஸ்சிஸ்: எங்கள் அமைப்பு பணியாற்ற தொடங்கி இது பத்தொன்பதாம் வருடம். இதை நான் மற்றவர்களுடன் சேர்ந்து தொடங்கினேன். சின்னதாக எளிமையாக தொடங்கப்பட்ட இந்த அமைப்பை இப்போது பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது. இங்குள்ள சிறுவர் உரிமை மீறல்களை கண்காணிப்பதும், குறிப்பெடுத்துக் கொள்வதும், அந்த சிறுவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதும் தான் எங்களின் முதன்மையான பணி.
அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு கலவரங்களில் சிறுவர்கள் பாதிக்கப்படாமல் காப்பதும் எங்கள் பொறுப்பு. உதாரணத்துக்கு இங்குள்ள (பாலஸ்தீனம்) கல்வி அமைச்சகத்துடன் இணைந்து, சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்க படுவதையும், மற்ற சமூக தொண்டு நிருவனங்களுடன் சேர்ந்து சிறுவர்களின் உரிமைகளை காப்பதும், அவர்களை பணிகளில் சேர்ப்பது பற்றியும், சிறுவர்கள் தங்களுக்கான உரிமைகளை தெரிந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அழைப்பு விடும்படியும், அதன்மூலம் உள்நாட்டு கலவரங்களையும், சிறுவர்கள் உடல் ரீதியாக தண்டிக்கப்படுவதையும் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எண்ணுகிறோம்.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்கள் மீதான முக்கிய குற்றச்சாட்டு என்ன?
ரி: எங்களிடம் உள்ள தகவலின் படி ஒவ்வொரு வருடமும் சுமார் 700 சிறுவர்கள் இஸ்ரேலிய நீதிமன்றங்களால் குற்றஞ்சாட்டபட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர், அதாவது சுமார் 26%, இஸ்ரேலிய ராணுவத்தின் மீது கல்லெறிந்ததால் பிடிக்கப்பட்டவர்கள்.
மற்ற காரணங்கள், தடை செய்யப்பட்ட அரசியல் பணிகளில், ஆர்ப்பாட்டங்களில் பங்குபெற்றது போன்றவை. இப்படி சிறையில் உள்ள சிறுவர்களில் பனிரெண்டு வயது சிறுவர்கள் கூட உண்டு.
அ: இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன சிறுவர்களின் அனுபவங்கள் குறித்து கூற முடியுமா?
ரி: நாங்கள் இந்த சிறுவர்களிடமிருந்தும், அவர்களது பெற்றோர்களிடமிருந்தும், அவர்களது வழக்கறிஞர்களிடமிருந்தும், ஒரே விதமான தகவல்களையே பெறுகிறோம். அதாவது இஸ்ரேலிய வீரர்கள் இரவிலோ, விடியற்காலையிலோ, சிறுவர்களின் வீட்டிற்கு வருவார்கள். பெரும் இரைச்சல் போட்டுக்கொண்டு காட்டமான முறையில் வீட்டிற்குள் நுழைவார்கள். அந்த சிறுவர்களின் பெற்றோர்களிடம் எந்த ஒரு காரணமும் கூறாமல் சிறுவர்களை அழைத்து சென்று விடுவார்கள். சில சிறுவர்கள் சோதனைச் சாவடிகளில் வைத்து கைது செய்யப்படுவதும் உண்டு.
சிறுவர்கள் அவர்களது வீட்டிலிருந்து அழைத்து செல்லப்படும்போது அந்த வீரர்கள் கத்துவார்கள், “இங்கே யார் முஹம்மது”. அந்த முஹம்மது என்ற சிறுவனுக்கு 12-13 வயது இருந்தாலும் சரி, கண்டுக்கொள்ளமாட்டர்கள். அவனை உதைப்பார்கள், கண்ணை கட்டுவார்கள், அவன் கைகளை பிளாஸ்டிக் கயிறுகளால் அவன் வலியுனால் துடிக்குமளவு கட்டுவார்கள். பின்னர் அவர்களது வாகனத்திற்கு பின்னால் அவனை போட்டுக்கொண்டு சென்று விடுவார்கள். வாகனத்தில் வைத்தும் அடிப்பார்கள். இது அந்த சிறுவர்களுக்கு உளவியல் ரீதியாக மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப்படுத்தும்.
அந்த சிறுவர்கள் கொண்டு செல்லப்பட்ட இடத்தில், ஒன்று சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது கேள்வி கேட்க அழைத்து செல்லப்படுவார்கள். கேள்வி கேட்கப்படும்போதும் அவர்கள் உதைக்கப்படுவார்கள், அடிக்கப்படுவார்கள், தவறான வார்த்தைகளால் திட்டப்படுவார்கள். அவர்களது குடும்பங்களை அழித்து விடுவோம் என்றும், அவர்களுடைய தாய்மார்கள் கற்பழிக்கப்படுவார்கள் என்றும் மிரட்டப்படுவார்கள்.
பெரும்பாலான நேரங்களில் அந்த சிறுவர்கள் தாங்கள் குற்றம் செய்ததாக சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குள்ளாக ஒப்புக்கொள்வார்கள், குற்றம் செய்திருந்தாலும் சரி, செய்யா விட்டாலும் சரி.
இது சர்வதேச சிறுவர் விதிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது. சென்ற ஆண்டு இஸ்ரேலிய இராணுவச் சட்டம் ஒன்று சிறுவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது. அது அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வந்தது. இதில் நாம் மேலே பார்த்த தவறுகள் திருத்தப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆனால் என்னுடைய வழக்கறிஞர்களை கேட்டீர்களானால் அவர்கள் சொல்லுவார்கள் இன்னும் இதுபோன்ற விதிமுறை மீறல்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன என்று. பெரியவர்களுடன் இந்த சிறுவர்கள் நீதிமன்றங்களுக்கு கொண்டு வரப்படுகிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், இஸ்ரேலிய இராணுவ நீதிமன்றங்களில் சிறுவர்களுக்கான விதி முறைகளே கிடையாது. சிறுவர்களுக்கு அங்கு நியாயமும் கிடைக்காது.
அ: இஸ்ரேலிய ஆக்கிரமிப்பால் ஏற்ப்பட்ட கலவரங்களில் இதுவரை எத்தனை சிறுவர்கள் உயிரிழந்திருப்பார்கள்?
ரி: இரண்டாவது பாலஸ்தீன இன்டிபிடா (செப்டம்பர் 2000) தொடங்கி இன்றுவரை சுமார் ஆயிரம் சிறுவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் சென்று ஆண்டு குளிர்க்காலத்தில் காசா பகுதியில் கொல்லப்பட்ட 348 சிறுவர்களை சேர்க்காமல்.
எப்படி இவர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதற்கும் எங்களிடம் ஆதாரங்கள் உள்ளன. சிலர் நேரடியாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வேறு சிலர் மற்றவர்களையோ அல்லது வீடுகளையோ சுடும்போது குறுக்கே வந்தவர்கள். மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தவர்களையும் மறந்து விட வேண்டாம்.
இப்போது காசாவில் உள்ள தடை உத்தரவால் மனித உரிமை இயக்கங்களால் கணக்கெடுக்க முடிவதில்லை. உதாரணத்துக்கு பசியால் இறந்த ஒரு சிறுவனை எங்களால் கணக்கெடுக்க முடியவில்லை.
நிறைய சிறுவர்கள் அராஜகமாக இஸ்ரேலியர்களால் கொல்லப்படுகின்றனர்.  2008 இல் இஸ்ரேலிய ஆக்கிரமைப்பால் ஏற்ப்பட்ட கலவரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். சுமார் 20 சிறுவர்கள் காயப்பட்டும், சிலர் இறந்தும் உள்ளனர். இதனை நாங்கள் நவம்பர் 2008 இல் எழுதினோம்.
அ: மனித உரிமை நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளை இஸ்ரேல் தொடர்ந்து விமர்சித்து வருகிறதே. அதுப் பற்றி?
ரி: அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் கண்மூடித்தனமான ஆதரவு மற்றும் தன் இராணுவ பலத்தை நம்பியிருக்கும் நாடு இஸ்ரேல். மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயக நாடு என்பதுதான் அது இன்றளவும் இருப்பதற்கு காரணம்.
மனித உரிமை மீறல்கள் குறித்து பாலஸ்தீன அமைப்புகள் குரல் கொடுத்தால், அரசியல் காரணங்களை காட்டி இஸ்ரேல் அவற்றை நிராகரித்து விடும். ஆனால் சர்வதேச அமைப்புகளிடம் அது முடியாது.
மேற்கு கரை மற்றும் காசா பகுதியில் தன் பலத்தை காட்ட இஸ்ரேல் நினைத்தால், செய்தியை வழங்க ராணுவத்திலிருந்து ஒரு ஊடகப்பிரிவை அமைத்துக்கொள்ளும். எந்த ஒரு சர்வதேச ஊடகங்களையும் உள்ளே அனுமதிக்காது.
இஸ்ரேலுக்கு அந்த சர்வதேச ஊடகங்கள் இங்கே தேவையில்லை. அதுபோல இஸ்ரேல், சர்வதேச அமைப்புகளை ஜெருசலத்தை விட்டு வெளியேற்றவே நினைக்கிறது. நாங்கள் பல முக்கியமான தகவல்களை சேகரிக்க, சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், மற்றும் எங்கள் அமைப்பை சேர்ந்த பல வெளிநாட்டினரும் உதவியிருக்கின்றனர்.
நான் இஸ்ரேலை குறை கூற விரும்பவில்லை. நான் கண்டிக்க நினைப்பது, இஸ்ரேலுக்கு பணிந்து போய்க்கொண்டு தன் கொள்கைகளுக்கு துரோகம் செய்யும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளைத்தான்.
ஆனால் சர்வதேச நாடுகள் இதற்க்கெல்லாம் பணியாமல் மனித உரிமை இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
—end of interview—
துஆ செய்துக்கொண்டே இருப்போம், பாலஸ்தீன மக்களுக்கு அவர்களுடைய நிலம் திரும்ப கிடைக்கவேண்டுமென்று…
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…


மோனிகா புனித இஸ்லாம் மதத்தை தழுவினார்

By : Unknown
அஸ்ஸலாமு அலைக்கும் பிரபல தமிழ் நடிகை மோனிகா புனித இஸ்லாம் மதத்தை வாழ்க்கை நெறியாக ஏட்ருக்கொன்றார் அல்ஹம்துலில்லாஹ் 'அழகி', 'பகவதி', 'சண்டக்கோழி', 'சிலந்தி', 'முத்துக்கு முத்தாக' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் மோனிகா. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறியுள்ளார். தன் பெயரை ரகிமா என மாற்றிக் கொண்டார்.இனி, சினிமாவில் நடிப்பதில்லை என்றும் இவர் முடிவு செய்திருக்கிறாராம்
Tag : ,

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன"

By : Unknown
'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள். ( புகாரி - 01)
Tag : ,

குர்ஆன் என்னும் பெயர்

By : Unknown


வானவர் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம், நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.
Tag : ,

- Copyright © Dawah Times - - Powered by Ahamed saj - Designed by AHAMED SAJ -