- Back to Home »
- Tafsir »
- லூத் (அலை) அவர்களின் சமுதாயம் ஒரு முன்னெச்சரிக்கை...!
Posted by : Unknown
Thursday, June 5, 2014
இப்றாஹீம் அலைஹி வஸ்ஸலாம் அவர்களின் சகோதரனின் மகன் லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கனை பாலஸ்தீன நாட்டின் கிழக்குப் பகுதிக்கு அல்லாஹ் நபியாக அனுப்பினான். அதில் சதோம் என்பது முக்கியமான நகரமாகும். ஓரின புனர்ச்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த தன் சமுதாயத்தினரிடம் அந்த மானக்கேடான செயலை விட்டுவிடுமாறு லூத் அலைஹி வஸ்ஸலாம் அவர்கள் கட்டளையிட்டார்கள். ஆனால் அச்சமுகத்தினர் அத்தீயசெயலை மிகவும் பகிரங்கமாக செய்து வந்தனர். இதைப்பற்றி குர்ஆன் கூறுகிறது.
அப்போது அவர்: “என் இறைவனே! குழப்பம் செய்யும் இந்த சமூகத்தாருக்கு எதிராக எனக்கு நீ உதவி புரிவாயாக!” என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
நம் தூதர்(களாகிய மலக்கு)கள் இப்ராஹீமிடம் நன்மாராயத்துடன் வந்தபோது, “நிச்சயமாக நாங்கள்
இவ்வூராரை அழிக்கிறவர்கள்; ஏனெனில் நிச்சயமாக இவ்வூரார் அநியாயக்காரர்களாக இருக்கின்றனர்” எனக் கூறினார்கள்.
“நிச்சயமாக அவ்வூரில் லூத்தும் இருக்கிறாரே” என்று (இப்றாஹீம்) கூறினார்; (அதற்கு) அவர்கள் அதில் இருப்பவர்கள் யார் என்பதை நாங்கள் நன்கறிவோம்; எனவே நாங்கள் அவரையும்; அவருடைய மனைவியைத் தவிர, அவர் குடும்பத்தாரையும் நிச்சயமாகக் காப்பாற்றுவோம்; அவள் (அழிந்து போவோரில் ஒருத்தியாக) தங்கி விடுவாள் என்று சொன்னார்கள்.
இன்னும் நம் தூதர்கள் லூத்திடம் வந்த போது அவர்களின் காரணமாக அவர் கவலை கொண்டார். மேலும் அவர்களால் (வருகையால்) சங்கடப்பட்டார்; அவர்கள் “நீர் பயப்படவேண்டாம், கவலையும் படவேண்டாம்” என்று கூறினார்கள். நிச்சயமாக நாம் உம்மையும் உன் மனைவியைத் தவிர உம் குடும்பத்தினரையும் காப்பாற்றுவோம்; அவள் (உம்மனைவி அழிந்து போவோரில் ஒருத்தியாக) பின் தங்கி விடுவாள்.
நிச்சயமாக, நாங்கள் இவ்வூரார் மீது, இவர்கள் செய்து கோண்டிருக்கும் பாவத்தின் காரணமாக, வானத்திலிருந்து வேதனையை இறக்குகிறவர்கள் ஆவோம்.
(அவ்வாறே அவ்வூரார், அழிந்தனர்) அறிவுள்ள சமூகத்தாருக்கு இதிலிருந்தும் நாம் ஒரு தெளிவான அத்தாட்சியை விட்டு வைத்துள்ளோம். அல்குர்ஆன் 29:30-35
அதனால் உருவாகியதுதான் இந்த சாவுக்கடல் அல்லது லூத்தின் கடல். ஜோர்டான் நாட்டுத் தலைநகரம் அம்மானிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தான் சாவுக்கடல் உள்ளது.
இக்கடலில் உள்ள உப்பின் அளவு சாதரணமாக உள்ள கடலின் உப்பின் அளவைவிட 8 மடங்கு அதிகமாகும். ஆகையால் இந்நீரில் விழும் எல்லாப் பொருள்களும் மிதப்பதை காணலாம். உயிரினம் உயிர்வாழமுடியாத காரணத்தினால் இக்கடல் சாக்கடல் என்றழைக்கப்படுகிறது. இவ்வுலகில் ஓரின புணர்ச்சியில் ஈடுபடக்கூடிய எல்லா காலங்களிலும் உள்ள எல்லோருக்கும் ஒரு முன்னெச்சரிக்கையாக இக்கடலை அல்லாஹ் ஏற்ப்படுத்தியுள்ளான்.